தடமின்றி அழித்ததாக நினைத்த இஸ்ரேலுக்கு தலையில் அடி... வேலையே தொடங்கிய `ஹமாஸ்'...

x

டெல் அவிவ் நகரை குறிவைத்து காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட்களை வீசியுள்ளனர். அக்டோபர் 7 பயங்கர தாக்குதல் அனுசரிக்கப்படும் வேளையில் காசாவிலிருந்து மீண்டும் ராக்கெட்கள் வீசப்பட்டுள்ளது. கான் யூனிஸ் நகரிலிருந்து டெல் அவிவ் நோக்கி ராக்கெட்கள் வீசப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 2 பெண்கள் காயம் அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவில் ஹமாஸ் அமைப்பை ஒழிக்க இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை எடுத்தும் அங்கிருந்து ராக்கெட்கள் சீறிவருவது பதற்றத்தை மேலும் அதிகரித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்