"ஹமாஸை ஒழிக்கும் வரை போர்.." - இஸ்ரேலுக்கு கைக்கொடுக்கும் புது வியூகம் - உற்று பார்க்கும் உலகம்..

x

2 மாதங்களுக்கு மேலாக...சொந்த வீட்டை இழந்து... அன்புக்குரியவர்களை இழந்து..அடிப்படை தேவைகளை இழந்து இருப்பிடமின்றி தவித்து வருகின்றனர் காசா வாழ் பாலஸ்தீனியர்கள்..

பசியும்... துயரமும் வாட்ட..எப்போது இயல்பு நிலைக்கு திரும்புவோம் என்ற கேள்வியுடன் அல்லல்பட்டு வரும் காசா மக்களை அச்சுறுத்தி வருகிறது மழைக்காலம்..

போர் தாக்குதலுக்கு அஞ்சி சொந்த இருப்பிடத்திலேயே முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர் காசா மக்கள்..

தற்போது அந்த முகாம்களுக்குள் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அவதிக்கு ஆளாகியுள்ளனர்..மணல் பரப்பில் அமைந்துள்ள முகாம்கள் சேறும் சகதியுமாக காட்சியளிப்பதால்..இருப்பிடமின்றி தவிக்கின்றனர்..

மழைவெள்ளம், குளிர் காரணமாக பிள்ளைகள், பெரியவர்கள் காய்ச்சல் ஏற்பட்டு அவதியுற துவண்டு போயுள்ளனர் காசா வாழ் தாய்மார்கள்..

மற்றொரு புறம் காசாவில் தொடர் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதால்...பாதுகாப்பான இடங்கள் என கருதப்பட்ட பகுதிகளும் தற்போது பாதுகாப்பற்ற பகுதிகளாக மாறியுள்ளதாக ஐநா வேதனை தெரிவித்துள்ளது..

அதற்கேற்றார் போல் காசாவை சிதைத்து கொண்டிருக்கிறது இஸ்ரேல் ராணுவம்.. வடக்கு காசாவில் ஹமாஸ் இருப்பதாக கருதப்படும் பகுதிகளில் தாக்குதல்களை அரங்கேற்றி வந்த இஸ்ரேல், ரஃபா பகுதியிலும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது..

ரஃபா பகுதியில் நடந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் பலர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பதபதைக்க வைக்கும் காட்சிகள் தான் இவை...

வடக்கு காசா மட்டுமன்றி தெற்கு காசாவிலும் தாக்குதலை அரங்கேற்றி வரும் இஸ்ரேல் ராணுவம்..கான் யூனிஸ் பகுதியில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது...

இந்த தீவிர தாக்குதல்களுக்கு உலக நாடுகள் மத்தியில் கண்டனங்கள் எழுந்து வர..பொதுமக்கள் துன்புறுவதை தடுக்க வேண்டும் என குரல் வலுத்து வருகிறது..

ஆனால் முழுமையான வெற்றி கிடைக்கும் வரை போர் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.

பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் ராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்குவதில், ஐ.நாவின் போர் நிறுத்த முயற்சிகளை தடுப்பதில், பிணைக்கைதிகளை மீட்பதில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா அளித்த ஆதரவை நான் பெரிதும் பாராட்டுகிறேன். தற்போது இஸ்ரேலுக்கு பிணைக்கைதிகளை மீட்பதே முக்கிய குறிக்கோள். அதே நேரத்தில் ஹமாஸை ஒழித்து முழுமையான வெற்றி பெறும் வரை போர் தொடரும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்..

மேலும் ஹமாஸ் சுரங்கத்தை அழிக்க பல்வேறு திட்டங்களை வகுத்து வந்த இஸ்ரேலுக்கு...சுரங்கத்திற்குள் கடல்நீரை இறைத்து அழிக்கும் உத்தி பயனளிக்கும் என நம்பப்படுகிறது..

சுரங்கங்களில் கடல்நீரை பாய்ச்சும் பணியை தொடங்கியுள்ள இஸ்ரேல் ராணுவம், சுரங்க உலகத்தை அழிப்பதில் உறுதியாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்