அமெரிக்கா சென்ற பிரதமர்.. இஸ்ரேலில் வெடித்த போராட்டம்

x

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில், , ஹமாஸ் போராளி குழுக்களால் சிறைபிடிக்கப்பட்ட பணய கைதிகளை விடுவிக்க நடவடிக்கை கோரி, அவர்களது உறவினர்கள் பேரணி நடத்தினர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இஸ்ரேலுக்குள் நுழைந்து, ஆயிரத்து 200 பேரை கொன்ற ஹமாஸ் போராளிகள், 250 பேரை சிறைப்பிடித்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, ஹமாஸ் - இஸ்ரேல் போர் தொடங்கியது. பின்னர் படிப்படியாக பணய கைதிகள் விடுவிக்கப்பட்டநிலையில், தற்போது, 120 பேர் ஹமாஸ் போராளிகளிடம் இருப்பதாக தெரிகிறது. இதில், மூன்றில் ஒரு பகுதியினர் இறந்திருக்கலாம் என இஸ்ரேல் நம்புகிறது. இதனிடையே, பணயக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, அவர்களது உறவினர்கள் தலைநகர் டெல் அவிவில், பிரம்மாண்ட பேரணி நடத்தினர். ஹமாஸ் குழுக்களுடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தி, பணய கைதிகளை விடுவிக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இந்த பேரணி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்