இஸ்ரேலின் கொடூர தாக்குதல் போரால் காசாவில் உருவாகும் குட்டி விஞ்ஞானிகள் - உலகையே வியக்கவிட்ட 15 வயது சிறுவனின் மூளை

x

காசாவில், போரினால் வீடுகளை இழந்து டென்ட்டுகளில் மின் வசதியின்றி தங்கியுள்ள பொதுமக்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக மாற்று வழிகளை பயன்படுத்தி வருகின்றனர். காசா - இஸ்ரேல் போரினால், ஏராளமான பாலஸ்தீனியர்கள் வீடுகளை இழந்து முகாம்களில் டென்ட்டுகளில் தங்கியுள்ளனர். மின் நிலையங்கள், எரிபொருள் நிலையங்கள் அழிக்கப்பட்டு விட்டன. மின் வசதியின்றி பொதுமக்கள் இருளில் வசித்து வருகின்றனர். எனினும், போர்ச்சூழலிலும், மின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள சிறிய அளவிலான மாற்று வழிகளை கண்டுபிடித்துள்ளனர். நசீம் என்ற இளைஞர், சைக்கிள் சக்கரங்களை பொருத்தி, தனது தையல் இயந்திரத்தை இயக்கும் மாற்று வழியை உருவாக்கி கொண்டுள்ளார். 15 வயதான ஹ வுசம் அத்தர் என்ற சிறுவன், பள்ளி பாடத்தில் படித்த பாடங்களை கொண்டு, காற்றாடி, சிறிய மோட்டார் ஆகியவற்றை கொண்டு, மின் உற்பத்தி செய்து, வீட்டிற்கு தேவையான விளக்கு வெளிச்சத்தை உருவாக்கிக் கொண்டுள்ளான். முகம்மது ஷா என்ற மற்றொரு இளைஞர், தனக்கு கிடைத்த சோலார் பேனலைக் கொண்டு சிறிய அளவில் மின் உ ற்பத்தி செய்து, செல்போன்களுக்கு இலவசமாக சார்ஜ் போட்டு தருகிறார். தொலைக்காட்சி, இணையசேவை இல்லாத காசா பகுதியில், செய்திகளை ரேடியோ மூலம் மட்டுமே தெரிந்து கொள்கின்றனர். எனவே, முகம்மது ஷாவின் உதவி, அப்பகுதி மக்களுக்கு பேருதவியாக திகழ்கிறது.


Next Story

மேலும் செய்திகள்