"இஸ்ரேல் என்ற நாடே இருக்காது" - உலகை அதிரவிட்ட கருத்து
விவாத நிகழ்ச்சியின் போது காசா போர் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ட்ரம்ப்-கமலா ஹாரிஸ் தெரிவித்த கருத்துகளைக் கேட்கலாம்...பதிலளித்துப் பேசிய கமலா ஹாரிஸ்..."தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது...இஸ்ரேல் தன்னை எப்படி பாதுகாக்கிறது என்பது முக்கியம்" என கூறினார்... இப்போர் முடிவுக்கு வர வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்... போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த அவர், காசாவை மறுகட்டமைப்பு செய்யவும், இரு நாடுகள் தீர்வையும் உறுதிபட தெரிவித்தார்...
அதேகேள்வி ட்ரம்ப்பிடம் கேட்கப்பட்ட போது..."நான் அதிபராக இருந்திருந்தால் இப்போரே துவங்கியிருக்காது" என பதில் தந்தார்...கமலா ஹாரிஸ் இஸ்ரேலை வெறுக்கிறார் என்றும், அவர் அதிபரானால் 2 ஆண்டுகளில் இஸ்ரேலே இருக்காது எனவும் சாடினார்... ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்த கமலா, "அவர் சர்வாதிகாரிகளை போற்றுபவர்...சர்வாதிகாரியாக விரும்புபவர் என நன்றாகத் தெரியும்" என பதிலடி தந்தார்..