இதுல கூடவா இந்தியாவோட போட்டி?...இந்தியாவை முந்த மறைக்கப்பட்ட உண்மை?

x

குழப்பமான சூழலுக்கு இடையில், 76வது சுதந்திர தினத்தை கொண்டாடும் பாகிஸ்தானுக்கு உண்மையில் சுதந்திரம் கிடைத்தது எப்போது என்பதை விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

கடுமையான பொருளாதார நெருக்கடி, திரும்புமிடமெல்லாம் கடன், அரசியல் களேபரம், பாராளுமன்றம் கலைப்பு என சின்னாபின்னமாகியுள்ள பாகிஸ்தான், செய்வதறியாது ஸ்தம்பித்து போயுள்ளது.

இருப்பினும் இந்தியாவை வசைப்பாடவும், வம்பிழுக்கவும் தவறியதில்லை பாகிஸ்தான்.

இந்த நிலையில் தான் இன்று தனது 76வது சுதந்திர தினத்தை பாகிஸ்தான் கொண்டாடுகிறது. சுதந்திர தினத்திலும் இந்தியாவுடன் போட்டியிடும் வகையில் 40 கோடி ரூபாய் செலவில் 500 அடி உயரத்திற்கு கொடி உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த போட்டி இன்று நேற்று அன்றி, முதல் சுதந்திர தினத்தன்றே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

நீண்ட நெடிய கால போராட்டத்திற்கு பிறகு இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் அரசு முடிவு செய்திருந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இரண்டு தனித்தனி ஆதிக்கங்களை நிறுவ முடிவு செய்தது.

ஜூன் 30, 1948க்குள் அதிகாரத்தை இந்தியாவுக்கு மாற்ற அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டனுக்கு பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஆணையை வழங்கியது.

ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் சுதந்திரத்தை வழங்க சிந்தித்து வந்த மவுன்ட்பேட்டன், ஆகஸ்ட் 15ம் தேதி வழங்க முடிவு செய்தார். ஏனென்றால் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த 2ம் ஆண்டு நினைவு நாளும் அன்று தானாம். இதனால் தான் இந்த தேதியை தேர்ந்தெடுத்ததாக மவுண்ட் பேட்டனின் ஃப்ரீடம் அட் மிட்நைட் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தானை பிரித்து ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர நாடாக மாறும் என தேதி குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் கவர்னர் ஜெனரல் மவுன்ட் பேட்டன், ஆகஸ்ட் 14ம் தேதி நள்ளிரவில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஆட்சி அதிகாரத்தை, மாற்றினார்.

சுதந்திரம் பெற்ற பாகிஸ்தான், வெளியிட்ட முதல் முத்திரையில் ஆகஸ்ட் 15ம் தேதியே சுதந்திர குறிப்பிடப்பட்டது. முஹம்மது ஜின்னாவும் தனது முதல் உரையில் ஆகஸ்ட் 15ம் தேதியே சுதந்திர தினம் என தெரிவித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

இதன் பின்னரே, 1948ம் ஆண்டு, பாகிஸ்தானின் முதல் பிரதமரான லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவிற்கு முன்பாக சுதந்திர தினத்தை கொண்டாட முன் மொழியப்பட்டது.

அப்போதில் இருந்து தான் ஆகஸ்ட் 14ம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாட தொடங்கியது பாகிஸ்தான்.

ஆனால் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் படி, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் 15ம் தேதி தான் சுதந்திர தினம் என வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்