உலகையே உலுக்கிய ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து - நடந்த உண்மை இதுதான் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

x

கடந்த 19ம் தேதி, அஜர்பைஜானில் இருந்து ஈரான் திரும்பி கொண்டிருந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அடர்ந்த வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என பலர் சந்தேகித்த நிலையில், விபத்தில் கிடைத்த ஹெலிகாப்டர் பாகங்களில் குண்டு துளைத்ததற்கான அடையாளங்களோ அல்லது தோட்டாக்களோ ஏதும் கண்டறியப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. அதே போல் விபத்து நடப்பதற்கு முன்பு வரை, ஹெலிகாப்டர் நிர்ணயிக்கப்பட்ட பாதையிலேயே பயணித்ததாகவும் மலையின் மீது மோதிய பின்னரே, ஹெலிகாப்டர் தீ பிடித்து எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் இருந்த விமானக்குழுவிற்கும், கட்டுப்பாட்டு அறையை சேர்ந்தவர்களுக்கும் இடையே சந்தேகிக்கும் வகையில் உரையாடல்கள் ஏதும் நடைபெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த கட்ட விசாரணையில் கூடுதல் தகவல்கள் தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்