ஹரியானாவில் இணைய சேவை முடக்கம்..
ஹரியானாவில், வன்முறையால் பாதிக்கப்பட்ட நூஹ் மாவட்டத்தில், மொபைல் இணைய சேவை முடக்கம், வரும் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை வி.எச்.பி ஊர்வலத்தில் வன்முறை வெடித்ததில் இருதரப்பினர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால், நூஹ் உட்பட 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணையதள சேவை முடக்கப்பட்டது. இந்நிலையில், நூஹ் மாவட்டத்தில் மொபைல் இணைய சேவை முடக்கம், வரும் 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. ஹரியானாவில் கலவரம் தொடர்பாக 176 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story