இஸ்ரேலில் குடும்பத்துடன் சிக்கிய இந்திய MP..! இமீடியட் ஆக்சனில் இறங்கிய இந்தியா

x

ஜெருசலேமுக்கு குடும்பத்துடன் புனித யாத்திரை சென்றுள்ளார் வான்விரோய் கர்லூகி... தேசிய மக்கள் கட்சியின் எம்.பியான அவரும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த 24 பேரும் ஹமாஸ்-இஸ்ரேல் படைகள் நடத்தும் தொடர் தாக்குதல்களால் பெத்லகேமில் சிக்கியுள்ள நிலையில், மேகாலய முதல்வர் கான்ராட் சங்மா வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும்,

அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப வழிவகை செய்வதாய் உறுதி அளித்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று இரவு இந்தியா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்