சட்டென புதினுக்கு போன் போட்ட பிரதமர் மோடி - இது தான் ஆப்சன்
ரஷ்ய அதிபர் புதினுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். அப்போது, 22-வது இந்தியா - ரஷ்யா இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் ரஷ்யா வந்திருந்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். பல்வேறு இருதரப்பு விவகாரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு நாடுகளின் தலைவர்களும் ஆய்வு செய்தனர். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நிலவி வரும் மோதல் குறித்து இரு தலைவர்களும் தங்களின் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். பிரதமர் தனது சமீபத்திய உக்ரைன் பயணத்தின் அம்சங்களையும், புதினுடன் பகிர்ந்து கொண்டார். இரு நாடுகள் இடையேயான பிரச்சனையை தீர்க்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க நடவடிக்கைகள் மிகவும் அவசியம் என வலியுறுத்திய பிரதமர் மோடி, அத்துடன் பிரச்சனைக்கு நிலையான மற்றும் அமைதியான தீர்வை அடைய அனைத்து பங்குதாரர்களுக்கும் இடையே நேர்மையான மற்றும் நடைமுறை ஈடுபாடு முக்கியம் எனவும் கேட்டுக் கொண்டார்.