"இந்தியாவிற்கு எதிராக சீனா வளர்த்துவிட்ட எதிரி" | India | China | Rn ravi

x

சீனா, பாகிஸ்தானை நமக்கு எதிரியாக வளர்த்ததால், தற்போது பாதுகாப்பு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளதாக, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்தார்.இந்திய - சீன உறவு, சீனாவின் பார்வையில் இருந்து என்கிற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி, கிண்டி ராஜ் பவனில், ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய வெளியுறவு துறை செயலாளர் விஜய் கேஷவ கோகலே மற்றும் மெட்ராஸ் ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய ஆளுநர், சீனா தொடந்து இந்தியாவின் பகுதியை ஆக்கிரமித்ததாகவும், அதன் விளைவாக 5 ஆயிரத்து 500 சதுர கிலோமீட்டர் பகுதியை சீனா அக்ஷ்யசின் பகுதியில் பிடித்ததாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார். அப்போது இருந்த தலைவர்கள் அகிம்சை பற்றியே பேசிக்கொண்டு இருந்ததால், நாம் மிக பெரிய விலையை கொடுக்க நேரிட்டதாகவும் தெரிவித்தார். அது மட்டுமின்றி, சீனா - பாகிஸ்தானை நமக்கு எதிராக வளர்க்க ஆரம்பித்ததாகவும், அது நமது எல்லை மட்டுமின்றி, பல இடங்களில் பிரச்சனையாக மாறியதாகவும் தெரிவித்தார்.தற்போது 10 ஆண்டுகால புதிய ஆட்சியால் இந்த நிலை மாறி உள்ளதாகவும், அட்டல் குகை, பல சாலைகள், ஹெலிகாப்டர் இறங்கும் தளம் ஆகியவற்றை எல்லைப்பகுதியில் அமைத்துள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்