இந்தியர்கள் தூங்கும் நேரத்தில் சைலெண்டாக சம்பவம் செய்த சீனா.. மெர்சலான உலகம்
இந்தியர்கள் தூங்கும் நேரத்தில் சைலெண்டாக சம்பவம் செய்த சீனா.. மெர்சலான உலகம்
சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கட்டுமான பணிக்காக, 3 விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வடமேற்கு சீனாவின் ஜியுகுவானில் (Jiuquan) உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்திய நேரப்படி, நள்ளிரவு 2 மணியளவில் ஷென்ஷு-19 என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி புவி சுற்றுவட்டப்பாதைக்கு சென்றதும், ராக்கெட் பிரிந்து விண்கலம் இலக்கை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டியாங்கோங் என்ற சீனாவின் சொந்த விண்வெளி ஆய்வு நிலையத்தை அடைந்ததும், 3 விண்வெளி வீரர்களும், விண்வெளி ஆய்வு மையத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இவர்கள் அடுத்த 6 மாதங்கள் விண்ணில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story