ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா
ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா
உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஐ.நா.சபையில் நிறைவேறியது. போரில்
உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை ரஷ்ய தன்னுடன்
இணைத்து கொண்டது. இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் கண்டித்தன. இந்த நிலையில் உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யா இணைத்ததை கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட திட்டமிடப்பட்டது. இதன்படி ரஷ்யாவை
கண்டிக்கும் இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும்
வாக்களித்துள்ளன. இந்தியா உள்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன.
Next Story