சீனாவின் ஆட்டத்தால் தப்பிய தலைவர்... நம்பியவர்களை காத்து நின்ற இந்தியா - யார் யார் எங்கே?

x

சீனாவின் ஆட்டத்தால் தப்பிய தலைவர்

நம்பியவர்களை காத்து நின்ற இந்தியா

அன்று முதல் இன்றுவரை யார் யார் எங்கே?

ஷேக் ஹசீனா பிரிட்டனிடம் அடைக்கலம் கோரும் வேளையில், சொந்த நாட்டில் பிரச்சினைகள் சூழ்ந்ததும் பிற நாடுகளுக்கு தப்பிச் சென்று தஞ்சமடைந்த தலைவர்கள் கதையை பார்க்கலாம்..

1951-ல் சீன ராணுவம் திபெத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்றியதை தொடர்ந்து, திபெத் மக்கள் கிளர்ச்சியில் இறங்க, 1959 சீன அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த தலாய்லாமா இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். இப்போது வரையில் இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இருந்து வருகிறார் தலாய்லாமா..

1977-ல் பாகிஸ்தான் பிரதமராக இருந்த சுல்பிகர் அலி பூட்டோ, ராணுவ ஆட்சி கவிழ்ப்பில் 1979 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். அப்போது சித்தரவதைக்கு உள்ளான அவரது மகள் பெனாசிர் பூட்டோ 1984 ஆம் ஆண்டு பிரிட்டனில் அடைக்கலம் புகுந்தார். 1986 ஆம் ஆண்டு மீண்டும் சொந்த நாடு திரும்பினார்.

பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப், பதவி நீக்கம் செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக 2008-ல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார். 2013-ல் தேர்தலில் போட்டியிட பாகிஸ்தானுக்கு திருப்பியவருக்கு, போட்டியிட தடை விதிக்கப்பட்டது. பல வழக்குகளை சந்தித்தவர், 2016-ல் மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றவர் 2023-ல் மரணம் அடைந்தார்.

பாகிஸ்தானில் 3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்... ஊழல் வழக்கில் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்திருந்தது. 2019 ஆம் ஆண்டு நாட்டிலிருந்து வெளியேறிய நவாஸ் ஷெரீப் பிரிட்டனில் அடைக்கலம் புகுந்தார்... 2023 ஆம் ஆண்டு நாட்டுக்கு திரும்பினார்.

2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்ற அதிபராக இருந்த அஷ்ரப் கனி, மனைவி, குழந்தைகளோடு உஸ்பெகிஸ்தான் சென்றார். 2021 ஆகஸ்டில் அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தங்க அனுமதித்திருப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்தது.

2022 ஜூலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கொதித்து எழ, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு ஓடி, மாலத்தீவில் தஞ்சம் அடைந்தார். பின்னர் சிங்கப்பூர், தாய்லாந்துக்கு சென்றவர் 2022 செப்டம்பரில் நாடு திரும்பினார். ஆனால் அப்போது அவருக்கு அடைக்கலம் வழங்கவில்லை என தாய்லாந்து தெரிவித்தது.

வங்கதேசத்தில் 1975-ல் ஹசினாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் உள்பட குடும்பத்தை சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்டனர்.

அப்போது ஜெர்மனியில் இருந்ததால் உயிர்தப்பிய ஹசீனாவுக்கும், அவரது தங்கை ஷேக் ரெஹானாவுக்கும் இந்தியாவே அடைக்கலம் கொடுத்தது.

டெல்லியில் பாதுகாப்பாக தங்கியிருந்த ஹசீனா 1981 ஆம் ஆண்டு நாடு திரும்பினார். நாட்டில் 20 ஆண்டுகளாக பிரதமராக பணியாற்றி, இரும்பு பெண்மணியாக வலம்வந்த ஹசீனா மாணவர் போராட்டத்தால் பதவியையும், நாட்டையும் விடுத்து தற்காலிகமாக இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கிறார்


Next Story

மேலும் செய்திகள்