ஐஸ்கிரீமில் மனித விரல்.. நடுநடுங்கிய பெண்.. வெளியான புதிய தகவல் | Ice Cream | maharashtra

x

ஐஸ்கிரீமில் மனித விரல்.. நடுநடுங்கிய பெண்.. வெளியான புதிய தகவல்

ஐஸ்கிரீமில் மனித விரல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, உற்பத்தியாளரின் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது...

மகாராஷ்டிர மாநிலம் மலாட்டைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்திருந்தார்... டெலிவரி செய்யப்பட்ட ஐஸ்கிரீமை அவர் சாப்பிட்ட போது வாயில் அசாதரணமாக ஏதோ ஒரு பொருள் தென்படுவதை உணர்ந்தார்... எடுத்துப் பார்த்த போது அது துண்டிக்கப்பட்ட மனித விரல் என்பதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்... உடனடியாக போலீசில் புகாரளிக்கப்பட்டது... இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மேற்கு மண்டல அலுவலகம் ஐஸ்கிரீம் உற்பத்தியாளரின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது... இருப்பினும், தடயவியல் ஆய்வகத்தின் அறிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்