300க்கும் மேல் உயிரிழப்பு... சேறும் சகதியுமாய் ஆப்கானிஸ்தான்

x

வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பக்லான், படக்‌ஷான், கோர் மற்றும் ஹெரட் ஆகிய மாகானங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் அடித்துச் சென்றதால், ஏராளமான பொதுமக்கள் மாயமாயினர். தாலிபன் ராணுவம் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளதால், அவர்களுக்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, தாலிபான் அரசும், ஐ.நாவின் உலக உணவு நிறுவனமும் செய்து வருகின்றன. இதுவரை இந்த வெள்ளத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் ஐ.நா உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்