கொட்டித் தீர்த்த கனமழை...ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேற்றம் சிலி நாட்டில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

x

சிலி நாட்டில் கொட்டி வரும் தொடர்மழை மற்றும் மழை பாதிப்புகள் காரணமாக 4 பிராந்தியங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, டெனோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. லாஸ் மாக்விஸ் நகரத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. கனமழையால், 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றன. 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனிடையே, மழை பாதிப்புகள் காரணமாக சிலி நாட்டின் 4 பிராந்தியங்களில் அதிபர் கேப்ரியேல் போரிக் அவசர நிலையை பிறப்பித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்