கைத்துப்பாக்கி விற்பனைக்கு தடை - பிரதமர் அதிரடி நடவடிக்கை

x

கைதுப்பாக்கிகள் விற்பனையை முடக்க கனடா அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. கனடாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கைத்துப்பாக்கி கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்கவும், அதன் விற்பனையை தடை செய்யவும், பிரத்யேக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே துப்பாக்கி வைத்திருப்பவர்களிடமிருந்தும் துப்பாக்கி பிரயோகத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்த புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். சமீப காலமாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் துப்பாக்கி சூடுகள் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்