"ஹிட்லரை கண்முன் நிறுத்திய ஹமாஸ்" - இஸ்ரேலின் அயர்ன் டோமை கையில் எடுக்கும் அமெரிக்கா

x

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் 4 வது முறையாக தொலைபேசியில் பேசினார்.

இஸ்ரேல், ஹமாஸ் போராளி குழுக்கள் இடையே போர் வெடித்துள்ள நிலையில், இரு தரப்பிலும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஹமாஸ் தாக்குதலுக்கு கண்டம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜோ பைடனுடன், பெஞ்சமின் நேதன்யாகு 4 வது முறையாக நேற்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இஸ்ரேலின் கூடுதல் பாதுகாப்பு கோரிக்கைளை நிறைவேற்ற முயற்சிப்பதாக பைடன் உறுதியளித்ததாக தெரிகிறது. மேலும், இஸ்ரேலின் அயர்ன் டோம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை சீரமைத்து தருவதாக பைடன் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்