உக்கிரமான தரைவழி தாக்குதல்.. 10 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொலை - ராட்சச முகம் காட்டிய இஸ்ரேல்
இஸ்ரேல் படைகள் காசாவில் இரவு முழுவதும் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன... அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹமாசை அழிக்க காசாவில் மிக ஆழமாக தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் தாக்குதலில் ஆயிரத்து 400 பேர் இஸ்ரேலில் கொல்லப்பட்டதுடன், 240க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம், காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் எனவும் பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Next Story