அமெரிக்க ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு.. கடைசி 10 நாட்களில் தங்கத்தின் உச்சம்

x

அமெரிக்க ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு.. கடைசி 10 நாட்களில் தங்கத்தின் உச்சம் - இனிதான் ஆட்டமே...காத்திருக்கும் டுவிஸ்ட்

தங்கம் விலை கடந்த பத்து நாட்களில் 2,320 ரூபாய் அதிகரித்துள்ளது. அது குறித்த விவரங்களை இந்தத் தொகுப்பு அலசுகிறது. அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து

வருவதால், அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை

குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக

கடன் பத்திரங்களில் இருந்து தங்கத்திற்கு சர்வதேச

முதலீடுகள் மாறி வருகின்றன.

இதனால் சர்வதேச சந்தைகளில் தங்கம் விலை

தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பின் தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை அதன் பின்னர் படிப்படியாக குறைந்து அக்டோபர் 4-ல் 42,280ஆக இருந்தது. மீண்டும் அக்டோபர் 7-ல் இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கிய பின், மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.

அக்டோபர் 9-ல் 42,920 ரூபாயாக அதிகரித்து, அக்டோபர்

12-ல் 43,440 ரூபாயாக உயர்ந்து, அக்டோபர் 14-ல்

44,400 ரூபாயாக அதிகரித்தது.

அக்டோபர் 25-ல் 45,240 ரூபாயாக அதிகரித்து, அக்டோபர்

28-ல், 46,160ஆக மேலும் உயர்ந்தது.

பின்னர் படிப்படியாக குறைந்த தங்கம் விலை, நவம்பர்

3-ல், 45,600 ரூபாயாக சரிந்து, நவம்பர் 9-ல் 44,920

ரூபாயாக மேலும் குறைந்தது.

டிசம்பர் 4-ல் 47,800 ரூபாயாக உச்சமடைந்த தங்கம் விலை

டிசம்பர் 13-ல் 47,600 ரூபாயாக சரிந்தது. 2024 ஜனவரி 18-ல்

46,240 ரூபாயாக மேலும் சரிந்தது.

பிப்ரவரி 2-ல் 47,120 ரூபாயாக மீண்டும் அதிகரித்து, பிப்ரவரி

3-ல் 46,960 ரூபாயாக மீண்டும் குறைந்தது.

மார்ச் ஒன்றில் 46,720 ரூபாயாக குறைந்த தங்கம்

விலை மார்ச் 9-ல் 49,200 ரூபாயாக புதிய உச்சத்தை

எட்டியது.

மார்ச் 18-ல் 48,720 ரூபாயாக சற்றே குறைந்த தங்கம்

விலை, மார்ச் 21-ல் 49,880 ரூபாயாக உச்சமடைந்தது.

மார்ச் 28-ல் 50,000 ரூபாயை எட்டிய தங்கம் விலை,

ஏப்ரல் 2-ல் 51,640 ரூபாயாக அதிகரித்தது.

ஏப்ரல் 6-ல் 52,920 ரூபாயாக அதிகரித்த தங்கம் விலை,

ஏப்ரல் 8-ல் 53,280 ரூபாயாக இதுவரை இல்லாத அளவுக்கு

உச்சமடைந்துள்ளது. இன்று(8ம் தேதி ) மட்டும் சரவனுக்கு 360 ரூபாய் அதிகரித்துள்ளது.

மார்ச் 30-ல் சவரனுக்கு 50,960 ரூபாயாக இருந்த தங்கம்

விலை, கடந்த 10 நாட்களில் 2,320 ரூபாய் அதிகரித்துள்ளது

குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஒரு வருடத்தில், தங்கம் விலை மேலும்

அதிகரிக்க வாய்ப்புள்ளதாக துறைசார்

நிபுணர்கள் கணித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்