ரஷ்ய தாக்குதலை முறியடிக்க ஜெர்மன் களம் - உக்ரைன் விரையும் வான் பாதுகாப்பு கேடயம்

x

ரஷ்ய தாக்குதலை முறியடிக்க ஜெர்மன் களம் - உக்ரைன் விரையும் வான் பாதுகாப்பு கேடயம்

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் கரங்களை பலப்படுத்த மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை கொடுத்து உதவி வருகின்றன. ரஷ்யா மீண்டும்

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ஜெர்மனியிலிருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதாவது விரைவில் தங்களது

Iris-T வான் பாதுகாப்பு கேடயம் உக்ரைனை அடையும் என ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீண்ட நாட்களாவே உக்ரைன் தங்களுக்கு

வான் பாதுகாப்பு கட்டமைப்பு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தது. இப்போது ஜெர்மனி வழங்கும் வான் பாதுகாப்பு கேடயம் ரஷ்ய போர்

விமானம், ட்ரோன்கள், ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழிக்கவல்லது. இதனை கொண்டு உக்ரைனிய நகரங்களை ரஷ்யா தாக்குவதை

தடுத்து நிறுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்