உயிரோடு புதைக்கப்படும் காஸா மக்கள்... கோர முகத்தை காட்டிய இஸ்ரேல்

x

காசாவிற்குள் எரிபொருள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கான் யூனிஸ் நகரில் பொதுமக்கள் கழுதை வண்டியில் பயணிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்... உணவு, குடிநீர், மின்சாரம், எரிபொருள் என எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர்... இஸ்ரேல் படைகள் கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், காயம் அடைந்தவர்களை தூக்கிச் செல்வதற்குக் கூட வாகனங்களுக்கு எரிபொருள் போட முடியாத சூழல் நிலவுகிறது... புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கூட மருத்துவமனைக்கு கழுதை வண்டியில் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எரிபொருள் இல்லாததால் மனிதாபிமான உதவிகளையும் சரியாக பொதுமக்களுக்குக் கொண்டு போய் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்