"குழந்தைகளுக்கான மயானமாக மாறிய காசா" - "இது அதிர்ச்சியாக இல்லையா?" சரமாரி கேள்வி வைத்த ரஷ்ய அதிபர்

x

ஜி20 உச்சிமாநாடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற நிலையில், அதில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் போர் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளித்தார்...

உக்ரைனுடனான போரில் மக்கள் இறப்பால் அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், 2014ல் உக்ரைனில் நடந்த போர் மற்றும், அதைத் தொடர்ந்து டான்பாசில் தங்கள் சொந்த மக்களுக்கு எதிராக உக்ரைன் அரசின் போர் ஆகியவை அதிர்ச்சியாக இல்லையா என்றும், பாலஸ்தீனத்தில் பொதுமக்கள் ஒழித்துக் கட்டப்படுவது மற்றும், குழந்தைகளுக்கு மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்படுவது அதிர்ச்சியாக இல்லையா எனவும், குழந்தைகளுக்கான மாபெரும் மயானமாக காசா மாறிவிட்டது என்ற ஐ.நா. பொதுச் செயலாளரின் வார்த்தைகள் அதிர்ச்சிகரமாக இல்லையா எனவும் புதின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்... உக்ரைனில் நடந்து வரும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் அதிர்ச்சியடைந்ததாக ஜி 20 தலைவர்கள் சிலர் பேசியதை சுட்டிக்காட்டிய புதின், ராணுவ நடவடிக்கைகள் எப்போதும் மோசமானவை என்று தெரிவித்ததுடன், நிச்சயமாக இவற்றை நிறுத்துவது குறித்து அனைவரும் சிந்திக்க வேண்டும் என்றும், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை ரஷ்யா ஒருபோதும் மறுத்ததில்லை எனவும் குறிப்பிட்டார்...


Next Story

மேலும் செய்திகள்