காசா மக்கள் மீது இரக்கம் காட்டிய இஸ்ரேல்.. வெளியான தகவல்
காசாவிற்குள் செல்லும் மனிதாபிமான உதவிகளின் அளவு வரும் நாட்களில் அதிகரிக்கப்படும் என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது...
அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் - காசா போர் துவங்கியது முதல் காசாவுக்கான அனைத்து பாதைகளும் மூடப்பட்ட நிலையில், ஏறக்குறைய 23 லட்சம் மக்கள் காசாவிற்குள்ளேயே போருக்கு மத்தியில் எவ்வித உதவிகளுமின்றி சிக்கித் தவித்தனர்... சர்வதேச அளவிலான அழுத்தத்தின் காரணமாக இஸ்ரேல், காசாவுக்குள் கட்டுப்பாடுகளுடன் உதவிகளை அனுமதித்தது... இந்நிலையில், கடந்த சில வாரங்களாக, காசாவுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிகளின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது என்றும், வரும் நாட்களில் உதவிகளின் அளவு மேலும் அதிகரிக்கும் எனவும் இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்...
Next Story