"ரூ.1 கோடி கிடைத்தால் நூலகம் கட்டுவேன் என்றார் காந்தி" - வறுமையில் வாடுவோருக்கு வரப்பிரசாதமாய் திகழும் நூலகம்
- பயனுள்ள நூல்களைக் கற்கவும், மக்களிடம் வாசிப்பு பழக்கத்தைத் தூண்டவும் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் வசிக்கும் முதியவர் ஒருவர் தனது வீட்டையே நூலகமாக மாற்றி அசத்தியுள்ளார்...
- ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது நூலகம் கட்டுவேன் என்றார் மகாத்மா காந்தி... அவ்வாறு படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த 72 வயதான ஹெர்னாண்டோ குவான்லாவ் என்ற முதியவர் பயன்படுத்தப்பட்ட மற்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தகங்களை வீடு முழுவதும் மலைபோல் குவித்து வைத்துள்ளார்... வீட்டின் அலமாரிகள், நடைபாதை என எங்கு திரும்பினாலும் தோட்டத்தை அலங்கரிக்கும் மலர் செடிகளைப் போல இவரது வீட்டை புத்தகங்கள் அலங்கரிக்கின்றன... ரீடிங் கிளப் 2000 என பெயரிடப்பட்டுள்ள இவரது வீட்டு நூலகத்தில் தினமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் வந்து புத்தகம் படித்துச் செல்கின்றனர்... வறுமையில் வாடும் படிக்கும் ஆர்வமுள்ள பலருக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே திகழ்கிறது...
Next Story