நேருக்கு நேர் சந்திக்கும்..ஜி ஜின்பிங்-பிரதமர் மோடி?

x

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019ம் ஆண்டுக்குப் பின்னர்,15வது பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, தென்னாப்பிரிக்காவில் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 22ம் தேதி தென் ஆப்பிரிக்கா செல்கிறார். மாநாட்டின்போது, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது இரு நாட்டு எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா பயணத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடி வரும் 25ம் தேதி கிரீஸ் நாடுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 40 ஆண்டுகளில் அந்நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்