தப்பியோடிய ராணுவ ஆட்சித் தலைவர்..அசால்ட்டாக மீண்டும் பிடித்த ராணுவம் | Guinea Africa
ஆப்பிரிக்க நாடான குனியாவில், சிறையில் இருந்து தப்பியோடிய முன்னாள் ராணுவ ஆட்சித் தலைவர், மீண்டும் பிடிபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு ராணுவ ஆட்சியை அமைத்தவர் மௌசா டெடிஸ் கேமரா. 2009ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது தாக்குதல் நடத்தி 150 பேர் கொல்லப்பட்ட வழக்கில், கொனக்ரி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சனிக்கிழமை சிறையில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டு, மௌசா டெடிஸ் கேமராவும், அவருடன் உயர் பதவி கொண்ட 3 அதிகாரிகளும் தப்பியோடினர். அவர்களை தேடி வந்த குனியா ராணுவம், கௌசா டெடிஸ் கேமராவையும், 2 அதிகாரிகளையும் மீண்டும் பிடித்துள்ளது. மற்றொருவரை தேடி வருவதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story