பிரிட்டனை தொடர்ந்து பிரான்ஸிலும் ஆட்சி மாற்றம்..? - உலகளவில் பரபரப்பை கிளப்பும் பொது தேர்தல்கள்

x

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் இன்று இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பிரான்சில் முன்கூட்டியே நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான்

திடீரென அறிவித்தார். 577 உறுப்பினர்களை கொண்ட

பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கு கடந்த ஜூன் 30ந்தேதி

முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் பிரான்சின் தீவிர வலதுசாரி கட்சியான தேசிய

பேரணி கட்சி 33% வாக்குகளுடன் முன்னிலையில்

உள்ளது. இடதுசாரிகளின் புதிய பாப்புலர்

ஃப்ரண்ட் கூட்டணி 28% வாக்குகளுடன் இரண்டாம்

இடத்திலும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின்

மையவாத கூட்டணி 20.7 % வாக்குகளுடன் மூன்றாம்

இடத்திலும் உள்ளன.

இந்நிலையில் பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலுக்கான

இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு

இன்று நடைபெற உள்ளது. இதிலும் தீவிர வலதுசாரி

கட்சியே அதிக வாக்குகளை பெறும் என்றும் ஆனால்

ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை

கிடைக்காது என்றும் கருத்துகணிப்புகள்

தெரிவிக்கின்றன. இதனிடையே தீவிர வலதுசாரி

கட்சி ஆட்சிக்கு வந்தால் பிரான்சில் வசிக்கும்

வெளிநாட்டவர் குடியுரிமைக்கு ஆபத்து வரலாம்

என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்