பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை

x

பரிசுப்பொருட்களை முறைகேடாக விற்ற வழக்கில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், 5 ஆண்டுகள் அரசியலில் ஈடுபட தடை விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த போது வெளிநாட்டு பிரதிநிதிகள் தனக்களித்த பரிசுப்பொருட்களை முறைகேடாக விற்றதாக இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இம்ரான்கான் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானதாக நீதிபதி தெரிவித்தார். இதனையடுத்து 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், பரிசுப்பொருட்களை கூடுதல் தொகைக்கு விற்றதை மறைத்ததற்காக 5 ஆண்டுகள் அரசியலில் ஈடுபடத் தடையும் விதிக்கப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை தொடர்ந்து, லாகூரில் உள்ள இல்லத்தில் இருந்த இம்ரான்கான் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கைது செய்யப்பட்டார். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக பிடிஐ கட்சி தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்