"ஹமாஸுக்கு குறி இல்லை; இஸ்ரேலின் நோக்கம் காஸாவை அழிப்பது தான் "அதிபரின் பேச்சால் பேரதிர்ச்சி

x

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவை அழிக்க விரும்புவதாகவும், ஹமாஸ் பயங்கரவாத செயலை செய்துள்ளதாகவும் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா குற்றம் சாட்டியுள்ளார்... பயங்கரவாத செயல் தானே தவிர, அவ்வமைப்பை பயங்கரவாத அமைப்பு என அவர் குறிப்பிடவில்லை என்பதையும் லூலா தெளிவுபடுத்தியுள்ளார்... ​​மத்திய கிழக்கின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக அவர் வருத்தம் தெரிவித்தார்... காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் சென்றடைய இஸ்ரேல் காசா இடையில் போர் நிறுத்தம் வேண்டும் என்ற பிரேசிலின் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தம் உள்ள 15 உறுப்பினர்களில் 12 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த போதும், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்திய நிலையில், வீட்டோ அதிகாரத்தை நிறுத்த வேண்டும் என்றும் லூலா வலியுறுத்தினார்...


Next Story

மேலும் செய்திகள்