பள்ளிக்குள் புகுந்து கத்திக்குத்து!குழந்தைகளை கொன்ற சிறுவன்!ICU-வில் 11 பேர்! ஒரு நாடே அதிர்ச்சியில்

x

இங்கிலாந்தில், ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கான நடனம் மற்றும் யோகா பயிற்சி வகுப்பில், கண்மூடித்தனமாக நிகழ்ந்த கத்திக்குத்து தாக்குதலில் 2 குழந்தைகள் கொல்லப்பட்டனர். சவுத்போர்ட் என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில், காயமடைந்த 9 குழந்தைகளில் 6 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர், 2 பெரியவர்களும் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கும், பாதிக்கப்பட்டோருக்கும் மன்னர் சார்லஸ், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்