காதலியை கரம்பிடித்த கிரிக்கெட் வீராங்கனை
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கனை டேனி வாட், தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார். லண்டனில் உள்ள டவுன் ஹால் பகுதியில் தனது காதலியான ஜார்ஜி ஹாட்ஜை,, டேனி வாட் முறைப்படி திருமணம் செய்துகொண்டார். உறவினர்கள், நண்பர்கள் சூழ நடைபெற்ற இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்களை டேனி வாட் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். pride month-ல் தனது காதலியை கரம்பிடித்த டேனி வாட்டிற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story