இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ராணுவ வீரர்கள்

x

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசின் பிறந்த நாள் விழாவின் அதிகாரபூர்வ நிகழ்ச்சியாக லண்டன் மாநகரில் உள்ள பங்கிங்காம் அரண்மனையில் ட்ரூப்பிங் த கலர் என்ற வண்ணமிகு ராணுவ

அணிவகுப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்க சாரட் வண்டியில் வந்த மன்னர் சார்லஸ், மற்றும் அவரது மனைவியும் ராணியுமான கமிலாவை பொது மக்கள் அன்புடன் வரவேற்றனர். இவ்விழாவில் மன்னர் சார்லசின் மூத்த மகனும் வேல்ஸ் இளவரசருமான வில்லியம் அவரது மனைவியும்

இளவரசியுமான கேட் மிடில்டன் மற்றும் தங்களது 3 குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். புற்றுநோய்

சிகிச்சைக்கு பிறகு முதல் முறையாக கேட் மிடில்டன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். வண்ணமிகு ராணுவ

அணிவகுப்பு மற்றும் விமான சாகசத்தை அரச

குடும்பத்தினர் அரண்மனை பால்கனியில் ஒன்றாக

நின்று கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்