"அடுத்த அமெரிக்க அதிபர்.." - 40 வருடமாக துல்லியமாக கணித்தவர் கை காட்டியது யாரை?
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் வரலாற்று ஆசிரியரும், தேர்தல் கணிப்பாளருமான ஆலன் லிக்ட்மேன் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிசும், குடியரசுக்கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் களம்காண்கின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆலன் லிக்ட்மேன், வெள்ளை மாளிகைக்குள் அதிபராக நுழைவதற்கான 13 முக்கிய அம்சங்களை குறிப்பிட்டுள்ளார். அதில், 8 அம்சங்கள் கமலா ஹாரிசுக்கு சாதகமாக இருப்பதாகக் கூறியுள்ளார். ஆலன் லிக்ட்மேனின் துல்லியமான தேர்தல் கணிப்புகள் கடந்த 40 ஆண்டுகளாக சரியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story