தேர்தலில் இருந்து விலகிய 78 எம்பிக்கள் - திரும்பும் பழைய வரலாறு?
பிரிட்டனில் வருகின்ற ஜூலை நான்காம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் தெரசா மே உட்பட 78 எம்பிக்கள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இது பிரதமர் ரிஷி சுனக்கிற்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் ரிஷி சுனக்கிற்கு எதிராக உள்ளது. இதற்கு முன்பு கடந்த 1997ல் தொழிலாளர் கட்சியின் டோனி பிளேர் பிரிட்டன் பிரதமராக பெரும் வெற்றி பெற்ற போது, இதேபோல் அன்று சுமார் 75 கன்சர்வேட்டிவ் கட்சி எம்பிக்கள் போட்டியிடுவதில் இருந்து விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story