ஈரான் அதிபர் மறைவு.. அஞ்சலி செலுத்தும்போது அடக்க முடியாமல் கதறி கதறி அழுத பெண்கள் | Ebrahim Raisi

x

விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் ரைசிக்கு, ஐ.நா பாதுகாப்பு அவை உறுப்பினர்களும், ஈரான், ஈராக்கில் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு, ஐ.நா பாதுகாப்பு அவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பாதுகாப்பு அவை உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். ஈராக்கில், பாக்தாத் நகரில் உள்ள ஈரான் தூதரகம் முன்பு, அதிபர் ரைசி, அமைச்சர் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் முன்பு பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தினர். தூதரகத்தில் அரை கம்பத்தில் தேசியக் கொடி பறக்க விடப்பட்டிருந்தது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அஞ்சலி செலுத்த ஏராளமான பொதுமக்கள் கூடினர். அதிபர் ரைசியின் புகைப்படத்தை கையில் ஏந்தியவாறு அஞ்சலி செலுத்திய போது, பெண்கள் கதறி அழுது கண்ணீர் வடித்தனர். டப்ரிஸ் நகரில் பொதுமக்களுடன் ராணுவ வீர‌ர்களும் வீதியில் நின்று, உயிரிழந்த அதிபர் ரைசிக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஈரான் அதிபர் இப்ரஹிம் ரைசியின் மரணத்திற்கு போப் பிரான்சிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த அனைவரது ஆன்மாக்களும் இறைவனை அடையட்டும் என்றும், இந்த இக்கட்டான நேரத்தில் ஈரான் நாட்டுக்கு தனது ஆன்மிக நெருக்கத்தை கூறியுள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் ஆன்மீக நெருக்கத்தை வழங்குவதாக போப் பிரான்சிஸ் உறுதி அளித்துள்ளார். அதிபர் ரைசி உள்ளிட்டோர் உயிரிழந்த‌ தகவல் அறிந்து வேதனை அடைந்த‌தாக, ஐ.நா பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். ரைசி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்கா, புதிய அதிபர் தேர்ந்தெடுத்து, ஈரானியர்களின் அடிப்படை உரிமை மற்றும் மனித உரிமைகள் வழங்குவதற்காக உறுதுணையாக இருப்போம் என்று கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்