துபாயில் நடைபெற்ற மாநாட்டை அதிர வைத்த சிறுமி - கைகூப்பி வரவேற்ற ஊர் மக்கள்

x

துபாயில் நடந்த ஐக் கிய நாடுகளின் காலநிலை மாநாடு 2023-ல் மேடையை அதிர வைத்த மணிப்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு அவரது சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது... லிசிப்ரியா கங்குஜம் என்ற அந்த சிறுமி எதிர்ப்புகளை மீறி திடீரென கண்டன பதாகைகளுடன் மேடையேறி கொஞ்சம் கூட அச்சமின்றி புதைபடிவ எரிபொருட்களுக்கு எதிராக உலக அரங்கில் உரையாற்றிய நிலையில் இச்சம்பவம் உலகம் முழுக்க பேசுபொருளானது... சொந்த ஊரான பஷிகோங்கிற்கு சிறுமி திரும்பிய நிலையில் அவருக்கு ஊர் மக்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பளித்தனர். தனது சமூகம் ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், கண்ணீரைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை எனவும் லிசிப்ரியா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்