இந்தியாவை அதிரவைத்த துபாய் போன் கால்.. குறும்பட இயக்குநரின் கொடூர வேலை.
தமிழகத்தில்... வறுமையின் பிடியிலும், வேலை வாய்ப்புக்கான தேடலிலும் சிக்கித் தவித்த பெண்களை பொறி வைத்து தூக்கி துபாய் அழைத்துச் சென்றிருக்கிறது ஒரு கும்பல்...
அழைத்துச் சென்ற பெண்கள் துபாயில் வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதும், இதில் சினிமா நடிகைகள் முதல் சின்னத்திரை பெண் பிரபலங்கள் வரை சுமார் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது....
வெளிநாடுகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் நடன கலைஞர்களுக்கு வேலை எனக்கூறி துண்டு பிரசுரங்கள் மூலம் ஒரு கும்பல் விளம்பரம் செய்திருக்கின்றனர்...
தொடர்ந்து வலையில் விழும் பெண்களை லாக் செய்யும் வகையில்... வெத்து பத்திரம் ஒன்றில் கையெழுத்து பெற நினைத்த கும்பல், இந்த வேலைவாய்ப்பில் முன்பணமாக 2 லட்ச ரூபாய் பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தையும் கூறியிருக்கின்றனர்..
இதன்படி, வெத்துப்பத்திரத்தில் கையெழுத்தும் இட்டு, இரண்டு லட்ச ரூபாயும் பெற்று துபாய் அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் தான், தற்போது இந்திய தூதரகத்தை அதிர வைத்திருக்கின்றனர்...
இதில், தோல்வியடைந்த திரைப்படங்களில் நடித்த நடிகைகளையும், சின்னத்திரை பெண் பிரபலங்களையும்... சென்னையை சேர்ந்த குறும்பட இயக்குநர் ஒருவர், துபாயில் கலைநிகழ்ச்சிகள் நடத்த இருப்பதாகவும் கூறி அழைத்துச் சென்று சிக்க வைத்தது தெரியவந்திருக்கிறது...
தாங்கள் சிக்கிக் கொண்டதை உணர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த பெண்களை, அவர்கள் கையெழுத்திட்ட ஒப்பந்த பத்திரத்தை காட்டிய கும்பல், முறையாக ஒத்துழைத்தால் ஒப்பந்ததில் சொன்னபடி 3 மாதத்தில் விட்டுவிடுவதாகவும், இணங்க மறுத்தால் காலம் முழுக்க இதுதான் கதி எனவும் சொல்லி மிரட்டியிருக்கின்றனர்...
இதில், கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர்... தான் அடைத்து வைக்கப்பட்டிருந்த துபாய் ஹோட்டலில் ஊழியர் ஒருவர் மூலம் இந்திய தூதரகத்தை செல்போன் மூலம் தொடர்ந்து கொண்ட நிலையில், இந்த ஒட்டுமொத்த சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது...
சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்களை இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார், தகவல் தெரிவித்த கேரள பெண்ணை, சென்னை வரவழைத்து விசாரணை நடத்தியதில், சென்னையை சேர்ந்த 3 தரகர்கள் உட்பட நால்வர் கைது செய்திருக்கின்றனர்...
குறும்பட இயக்குநரான பிரகாஷ்ராஜ், ஜெயக்குமார், ஆஃபியா மற்றும் கேரளவை சேர்ந்தவரும் துபாயில் பாலியல் தரகராக செயல்பட்டு வந்த ஷகீல் என்பவரையும் கைது செய்த போலீசார், அனைவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்..
தொடர்ந்து, நால்வரின் கூட்டாளிகளான 7 பேருக்கு இந்த வழக்கில் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது...
இந்நிலையில், இந்த கும்பலுக்கும்... சில மாதங்கள் முன் சென்னையில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து முதியவர்களுக்கு இரையாக்கிய கும்பலுக்கும், தொடர்பிருப்பதாக பகீர் தகவல் வெளியாகி இருக்கிறது...
பள்ளி மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வழக்கு விசாரணையின் ஒரு பகுதியே இந்த கும்பல் சிக்கியிருப்பதாக கூறப்படுவது பரபரப்பை மேலும் கூட்டியிருக்கிறது...