கடலில் தரை இறங்கிய "டிராகன்" - வெளியான வைரல் வீடியோ

x

அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்லும் பணியை சமீப காலமாக செய்து வருகிறது. அதன்படி சர்வதேச விண்வெளி மையத்தில் பணியாற்றிய பின்னர், ஹுடி ஹும்பேர்க் மற்றும் சுல்தான் அல்நயடி ஆகிய 2 விண்வெளி வீரர்களையும் தனது டிராகன் விண்கலத்தில் வெற்றிகரமாக பூமிக்கு திருப்பி அழைத்து வந்தது குறித்த வீடியோவை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இரவில் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய டிராகன் கலம், கடலில் தரையிறங்கும் காட்சிகளும், தரையிறங்கிய விண்வெளி வீரர்களை அமெரிக்க கடற்படையினர் மீட்கும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்