``கமலா இந்தியர் இல்லையா..?" போட்டோவை போட்டு பூகம்பத்தை கிளப்பிய ட்ரம்ப்
கமலா ஹாரிஸின் மீதான இனவெறி தாக்குதல் பேச்சுகளை டிரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனனாயக கட்சியின் சார்பில்
கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப்பும்
போட்டியிடுகின்றனர்.
இந்திய மற்றும் கருப்பின வம்சாவளியினரான கமலா ஹாரிஸ், திடீரென தூய்மையான கருப்பின பெண்மணியாக மாற முடிவு செய்துவிட்டதாக, புதன் அன்று டிரம்ப் கூறியிருந்தார்.
கமலா ஹாரிஸின் தாயார் ஷியமளா கோபாலன் தமிழகத்தை
சேர்ந்தவர் என்ற நிலையில், கமலா ஹாரிஸ் சிறுமியாக இருந்த போது
சென்னையில் அவரின் தாயாரின் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தை டிரம்ப் சமூக ஊடகத்தில் பகிரிந்துள்ளார்.
இந்திய வம்சாவளியினர் என்று பல காலமாக தன்னை கூறிக்
கொண்ட கமலா ஹாரிஸ், தற்போது தான் ஒரு கருப்பினத்தவர் என்று கூறிக் கொள்வதாக தெரிவித்தார்.
அவர் இந்தியரா அல்லது கருப்பினத்தவரா என்று தனக்கு
தெரியவில்லை என்று கூறியுள்ளார்.