"70 லட்சம் பேரை கொத்தாக கைது செய்த ஜோ பைடன்.." கொதித்த டிரம்ப் | Donald Trump

x

அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் எல்லை பகுதிகளில் அகதிகள் வருகை கட்டுப்படுத்தப்பட்டு குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்படும் என்று ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அரிசோனா மாகாணம் டக்ளஸ் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய கமலா ஹாரிஸ், மெக்சிகோ உள்ளிட்ட எல்லை பகுதிகளில் சட்ட விரோதமாக ஊடுருவி அமெரிக்காவில் ஏராளமானோர் தஞ்சம் புகுவது தடுத்து நிறுத்தப்படும் என்றும் , இது தொடர்பான சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்படும் என்றும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார். இதனிடையே மிச்சிகன் மாகாணம் வாக்கர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் அதிகரித்து வருவதாகவும் இது மோசமான விஷயம் என்றும் கூறினார். அமெரிக்கா, மெக்சிகோ எல்லைப்பகுதியில் சட்டவிரோதமாக ஊடுருவியதாக 70 லட்சம் பேர் அதிபர் பைடன் ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்