தெருநாய்களுக்காக ஒரு சரணாலயமே?

x

நம்ம ஊர்ல ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம், இப்படி பல சமூக சேவை செய்யுற கருணை இல்லங்கள பாத்திருப்போம்... ஆனா நாய்களுக்கு ஒரு இல்லம் இருக்கறத கேள்வி பட்டிருக்கீங்களா? இருக்கு... ஆதரவற்ற தெரு நாய்களுக்காக அப்படி ஒரு அழகான வீடு கட்டி குடுக்கப்பட்டிருக்கு...

பொலிவியா நாட்டோட தலை நகரான லா பாஸ் தான் இந்த அழகான வீடு இருக்கு.... மழைகாலம் வெயில்காலம்னு சாப்பாட்டுக்கு வழி இல்லாம, தெருவுல சுத்தி வாகனங்கள அடிபட்டு இறந்து போற நாய்கள பராமரிக்க பொலிவியா மக்கள் இப்படி ஒரு ஏற்பாட்ட செஞ்சிருக்காங்க.

அந்த வீட்ல என்னலாம் இருக்கு தெரியுமா? நாய்கள் விளையாட பொம்மை, சொப்பு ஜாமான்... தூங்குறதுக்கு பெட்... குடிக்க சுத்தமான தண்ணீர்... ஆரோக்கியமான சாப்பாடுனு சகல வசதியும் இருக்கு...

சகல வசதிகளோட இப்டி ஒரு வீடு இருக்குனு தெரிஞ்சதும், ஏரியா டாக்ஸ் எல்லாம் குடும்பத்தோட வந்து செட்டிலாகிடுச்சுங்க போல...

இதுங்க அங்க கும்மாளம் போடுறத, அந்த பகுதி மக்கள் வந்து பாத்து ரசிக்கறது மட்டுமல்லாம, அந்த நாய்கள குளிக்க வச்சி, பவுடர் அடிச்சி, ட்ரெஸ்லாம் போட்டு விட்டு அழகுபாக்குறாங்க...

இது போல சொந்த பந்தம் தான், இறைவா வா நன்றி சொல்கிறோம்.....சமுத்திரம் சாங்....


Next Story

மேலும் செய்திகள்