நடுரோட்டில் கிடக்கும் சடலங்கள்-மரண பயத்தோடு இடம்பெயரும் காசா மக்கள் - பதை பதைக்கும் காட்சி

x

தெற்கு காசா நோக்கி செல்லும் சாலையில் பொதுமக்களின் சடலங்கள் கிடப்பதைப் போன்ற பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன... முற்றுகையிடப்பட்ட காசாவில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. தற்போது தரைவழித் தாக்குதலையும் இஸ்ரேல் துவங்கியுள்ள நிலையில், வட காசா மக்கள் தெற்கு காசாவிற்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் எச்சரித்திருந்தது. உயிருக்கு பயந்து பாலஸ்தீனியர்கள் தெற்கு நோக்கி சென்று கொண்டுள்ளனர்... இந்த சூழலில், தெற்கு காசா நோக்கி செல்லும் சாலையில், ஒரு குழந்தை உட்பட பொதுமக்கள் சடலங்கள் மற்றும் அவர்களின் உடைமைகள் சிதறிக் கிடந்தன...


Next Story

மேலும் செய்திகள்