டானா புயல்.. நிவாரண மையத்தில் மக்களை மகிழ்ச்சியாக்கிய நிகழ்வு

x

டானா புயல்.. நிவாரண மையத்தில் மக்களை மகிழ்ச்சியாக்கிய நிகழ்வு

ஓடிசாவில் புயல் காரணமாக நிவாரண மையங்களுக்கு இடம் பெயர்ந்த 4 ஆயிரத்து 431 கர்ப்பிணிப் பெண்களில், ஆயிரத்து 600 பேர் குழந்தை பெற்றெடுத்தனர்.

மத்திய மேற்கு, வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த டாணா புயல், மேற்கு வங்கத்தின் பிதர்கணிகா அருகே தீவிர புயலாக கரையை கடந்தது. இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்தில் 5.84 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படனர். அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளில் இருந்து அனைத்து மக்களையும் வெற்றிகரமாக வெளியேற்றி இருப்பதாக ஒடிசா முதல்வர் சரண் மாஜி கூறினார். குறிப்பாக, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்து 431 கர்ப்பிணிப் பெண்களில் ஆயிரத்து 600 பேர், குழந்தை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். நிவாரண முகாம்களில் இருப்பவர்களுக்கு போதுமான அளவு உலர் மற்றும் சமைத்த உணவு, மருந்துகள் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்