தானாக விண்ணில் பாய்ந்து வெடித்து சிதறிய ராக்கெட் - நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

x

சீனாவில், ஸ்பேஸ் பயோனீர் என்ற தனியார் நிறுவனம் உருவாக்கிய விண்வெளி ராக்கெட் ஒன்று சோதனையின் போது, தானாகவே விண்ணில் பாய்ந்த நிலையில், சில நொடிகளிலேயே அது செயலிழந்து கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. மத்திய சீனாவில் உள்ள கோங்கி மலைப் பகுதிகளில், அந்த ராக்கெட் விழுந்து நொறுங்கிய காட்சிகள் வெளியாகி உள்ளன. முன்னதாகவே அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்