வெளியேறிய சீனா... இறங்கிய இந்தியா... இலங்கையில் மாறிய காட்சிகள்
இந்திய அரசின் நிதியுதவியுடன் நெடுந்தீவு, அனலைத் தீவு மற்றும் நயினா தீவு ஆகிய இடங்களில், வரும் 2025-ஆம் ஆண்டு மார்ச் மாததத்திற்குள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை ஏற்படுத்த இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக இலங்கை அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யு-சோலார் கிளீன் எனர்ஜி நிறுவனம், இந்த திட்டத்தின் கீழ் 530 கிலோவாட் காற்றாலை மின்சாரம், 1700 கிலோவாட் சூரியசக்தி உட்பட எரிசக்தி அமைப்புகளை உருவாக்க உள்ளது. முன்னதாக, சீனாவுடன் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அந்நாட்டு அரசு வெளியேறிய பிறகு, இந்திய அரசு பெற்றுள்ளது.
Next Story