ஏர்போர்ட்டில் கால் வைத்த உடன் சீன அதிபருக்கு ஹங்கேரி நாடு கொடுத்த ஷாக்!
ஏர்போர்ட்டில் கால் வைத்த உடன் சீன அதிபருக்கு ஹங்கேரி நாடு கொடுத்த ஷாக்!
சீனா, செர்பியா நாடுகள் இடையே பரஸ்பர எதிர்க்கால வளர்ச்சி உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. செர்பியா நாட்டில், சீன அதிபர் ஷி ஜின்பிங், அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வூசிக்கை சந்தித்து, இருநாட்டு உறவுகள், பரஸ்பர எதிர்கால வளர்ச்சி, இரு நாடுகளுக்கு இடையிலான அனைத்து துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர், சந்தின்பின் ஒரு பகுதியாக, சீனா, செர்பியா நாடுகள் இடையே, பரஸ்பர எதிர்காலத்திற்கான வளர்ச்சி, அனைத்து துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஹங்கேரி நாட்டுக்கு சென்றடைந்த சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு, விமான நிலையத்தில் ஆடல் பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், முதலில் பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். பின்னர், செர்பியா நாட்டுக்குச் சென்ற அவர், அந்த பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று ஹங்கேரி நாட்டுக்கு சென்றார். புடாபெஸ்ட் நகரத்திற்கு வந்த அ வரை, ஹங்கேரி நாட்டு அதிபர் தாமஸ் சுல்யோக், பிரதமர் விக்டர் ஓர்பான், அவரது மனைவி உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர். விமான நிலையத்திலேயே, ஆடல் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஷி ஜின்பிங்குக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.