சென்னைக்கு மேலே பறந்து கொண்டிருக்கும் போது விமானத்தில் நடந்த அதிர்ச்சி
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கத்தார் நாட்டின்
தோகாவிற்கு, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், 254 பயணிக்ளுடன் இன்று அதிகாலை சென்னை வான் எல்லையில் பறந்து கொண்டு இருந்தது. அப்போது அதில் குடும்பத்தினர் மூவருடன் பயணம் செய்த மலேசியாவை சேர்ந்த, 54 வயதான ரேமண்ட் செல்வராஜிற்கு
மாரடைப்பு ஏற்பட்டதால் அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதற்குள் செல்வராஜ் மரணமடைந்தது விட்டதால், விமான நிலைய போலீசார் செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.
Next Story