143 உயிர்களை காவு வாங்கிய கொடூர மழை..."நிக்காது மேலும் வெளுக்கும்" - அடிக்கும் அபாய மணி
பிரேசில் நாட்டில் மழை, வெள்ளத்தை பயன்படுத்தி வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவதால், போலீசார் ரோந்துப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தெற்கு பிரேசிலின் தெற்கு பகுதியில் உள்ள ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தின் போர்டோ அலெக்ரே பெருநகரப் பகுதி மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில், மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது. வீடுகளுக்குள் மழை, வெள்ளம் புகுந்துள்ளதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனிடையே, போர்டோ அலெக்ரே உள்ளிட்ட பகுதிகளில், மழை வெள்ளத்தை பயன்படுத்தி, ஆளில்லாத வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் வழிப்பறிகள் அதிகரித்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து, மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்துப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.